உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தஞ்சாவூர் ஓவியத்துக்கு என்றுமே மவுசு தான்

தஞ்சாவூர் ஓவியத்துக்கு என்றுமே மவுசு தான்

தஞ்சாவூர் ஓவியம் என்பது, ஒரு பாரம்பரிய தென்னிந்திய ஓவியப் பாணியாகும். இவ்வகை ஓவியங்களுக்கு, 2007-2008ல், இந்திய அரசாங்கத்தால் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பலவித வண்ணங்களில் வரையப்படும் இவ்வகை ஓவியங்களுக்கு, ஈடு இணை கிடையாது.பழங்காலத்தில் வைரம், வைடூரியம் என, முக்கிய கற்கள் பதித்து வரையப்பட்ட ஓவியங்கள் தற்போது, பல்வேறு வகையான கற்கள் பதித்து உருவாக்கப்படுகின்றன. 2017ம் ஆண்டு இந்தியாவின் சிறப்புமிக்க ஓவியக்கலை குறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அதில், தஞ்சாவூர் ஓவியம் உட்பட இந்தியாவின் கலை, பண்பாடு குறித்து விளக்கம் அளிக்கும் பல்வேறு பொருட்களுக்கு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.'புத்தாண்டு வாழ்த்துக்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அஞ்சல் தலை தொகுப்பில், 12 அஞ்சல் தலைகள் இடம் பெற்றிருந்தன. தஞ்சாவூர் ஓவியத்தின் சிறப்பை விளக்கும் வகையில், அஞ்சல் துறையால், 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் தலையாகும்.(நவ., 12, 13ல் சுகுணா திருமண மண்டபத்தில், அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை