உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறுவன்

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறுவன்

அன்னுார்: நல்லி செட்டிபாளையம், பெரியார் காலனியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் அபிநந்த். இரண்டு நாட்களுக்கு முன் இச்சிறுவன் குருக்கிளையம்பாளையம் சாலையில் 500 ரூபாய் நோட்டு கிடந்ததை பார்த்தான். உடனே அந்த பணத்தை எடுத்து அப்பகுதியில் உள்ள சிறு உணவகத்தில் தகவல் தெரிவித்தான்.அந்த உணவகத்தைச் சேர்ந்த கோபால் விசாரித்து உரியவரிடம் அந்தப் பணத்தை ஒப்படைத்தார்.இத்தகவல் அறிந்து, அன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன், அந்த சிறுவனுக்கு சால்வை அணிவித்து, பேனா உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.நல்லி செட்டிபாளையம் மக்கள் அந்த சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ