மேலும் செய்திகள்
நாய் கடித்து சிறுவன் காயம்
29-May-2025
அன்னுார்; தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த, சிறுவன் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அன்னுார் அருகே தனியார் ஆதரவற்றோர் இல்லம் செயல்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவனை, மாவட்ட மாற்றுத்திறனாளர் நலத்துறை அலுவலகம், கடந்தாண்டு அக்டோபரில் இங்கு சேர்த்தது.கடந்த 10ம் தேதி, அன்னுார் அருகே குமாரபாளையத்தில் உள்ள சேவை மையத்திற்கு, ஏழு பேருடன், அந்த சிறுவன் தொழிற்பயிற்சிக்கு சென்றுள்ளார். ஆனால் தேநீர் இடைவேளையில் வெளியே சென்றவரை காணவில்லை. பல இடங்களிலும், தேடியும் கிடைக்காததால், அன்னுார் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.
29-May-2025