பிராமணர் சங்கத்தின் சமஷ்டி உபநயனம்
தொண்டாமுத்தூர், ; கோவை மாவட்ட, தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்பிராஸ்) சார்பில், சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி பேரூரில் உள்ள வைதீகாள் மண்டபத்தில், நேற்று நடந்தது.காயத்ரி கனபாடிகள் தலைமையிலான வைதீகர்கள், வைதீக நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். 5 குழந்தைகளுக்கு, புதியதாக பூணூல் அணிவிக்கப்பட்டது.மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன், பொருளாளர் தெய்வசிகாமணி மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஒருங்கிணைந்து, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.பல்வேறு கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.