மேலும் செய்திகள்
கொடுமையை எதிர்த்து நில்... துாற்றுதல் ஒழி
10-Dec-2024
பொன்னான வாய்ப்பு தந்தது 'தினமலர்' kovai vizha | dinamalar
23-Nov-2024 | 1
கோவை,: கோவையில் தினமலர் மற்றும் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகை இணைந்து வழங்கும், 'மார்கழி விழாக்கோலம்' கோலப்போட்டி துவங்கியது.இந்த போட்டியில், அபார்ட்மென்ட்களில் குடியிருக்கும் பெண்கள் பங்கேற்று, பரிசுகளை வென்று வருகின்றனர். கோவை பீளமேடு நேஷனல் மாடல் பள்ளி அருகில் உள்ள சன்னிசைடு அபார்ட்மென்டில் நடந்த கோலப்போட்டியில், 24 பெண்கள் பங்கேற்று, புள்ளிக்கோலம் மற்றும் ரங்கோலி கோலங்களை வரைந்து, அசத்தி இருந்தனர்.கண்ணை கவரும் வண்ண பொடிகளை கொண்டு, தங்களின் கைவண்ணத்தை காட்டி இருந்தனர். சிலர் நல்ல 'தீம்'களை மையமாக கொண்டு, கோலத்தை உருவாக்கி இருந்தனர்.'வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும், யோகா தரும் உடல் நலமும்' என்ற கருத்தை மையமாக வைத்து, புள்ளிக்கோலம் போட்டு இருந்த நர்மதா, ராஜலட்சுமி ஆகியோர் பாராட்டை பெற்றனர். சிகாமணி, கனகா, அம்புஜம், இனியா ஆகியோரும் பரிசு பெற்றனர். ரங்கோலி கோலத்தில் ஹேமா, நந்திதா, சத்தியவதி, சத்தியபிரியா, ரம்மியா, யோகிதா, பிரியா, ரேவதி மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் பரிசு வென்றனர். யோகா கோலம் போட்டு, பாராட்டு பெற்ற நர்மதா, ராஜலட்சுமி கூறுகையில், 'நம் வாழ்க்கையில் சிக்கல்கள், பிரச்னைகளில் இருந்து விடுபட, சில யோகா பயிற்சிகளை பெண்கள் செய்தால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். அந்த கருத்தைதான் இந்த கோலத்தில் உருவாக்கி இருக்கிறோம்' என்றனர். துரியா அபார்ட்மென்டில்...
* கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள துரியா அபார்ட்மென்டில் நேற்று நடந்த கோலப்போட்டியில், 28க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, பூக்கோலம், புள்ளிக்கோலம் மற்றும் ரங்கோலி கோலங்களை போட்டு பிரமிக்க வைத்தனர். நடுவர்கள் ஒவ்வொரு கோலத்தையும், நுட்பமாக பார்த்து ரசித்து, பரிசுக்குரிய கோலங்களை தேர்வு செய்தனர். பூக்கோலத்தில் கீஷ்னா, கரிஷ்மா, ஹர்ஷாராய் மற்றும் சந்திரிகா ஆகியோர் பரிசு பெற்றனர்.புள்ளி கோலத்தில் ராதிகா, நித்யா, சண்முகா ஆனந்தி, விமலா, கவிதா மற்றும் நிதி ஆகியோர் பரிசு பெற்றனர். ரங்கோலி கோலத்தில் வினிதா, சிரன்யா, ரேவதி, கரிஷ்மா, ஸ்ரீநிதி, நட்சத்திரா ஆகியோர் பரிசு பெற்றனர்.சுற்றுச்சூழலை பாதுகாக்க, நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, கோலம் வரைந்து இருந்த அபூர்வா, சிறப்பு பரிசு பெற்றார். அபூர்வா கூறுகையில், ''நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க, மரங்கள் வளர்ப்பதுதான் சிறந்த வழி. அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதுதான் இந்த கோலத்தின் கருத்து,'' என்றார். கோலப்போட்டி நிகழ்வை, அல்ட்ரா மேடு பெர்பெக்ட்லி மற்றும் ஸ்ரீபேபி பிராப்பர்ட்டிஸ் நிறுவனத்தினர் இணைந்து வழங்கினர்.
10-Dec-2024
23-Nov-2024 | 1