உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கட்டுமானத்துறைக்கு குறைந்த செலவிலான தீர்வுகள் வேண்டும்

 கட்டுமானத்துறைக்கு குறைந்த செலவிலான தீர்வுகள் வேண்டும்

கோவை: கிரெடாய், நவீன கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பாளர்களையும் கட்டுமான நிறுவனங்களையும் இணைப்பதற்காக, 'கனெக்ட் 2025' எனும் கருத்தரங்கை ஓட்டல் ரெசிடென்சியில் நடத்தியது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கிரெடாயின் இந்த பயனுள்ள முயற்சியை பாராட்டினார். பல்வேறு விற்பனையாளர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார். கோவை கிரெடாய் தலைவர் அரவிந்த் குமார் பேசுகையில், ''வளர்ந்து வரும் கட்டட தொழில்நுட்பம், கட்டமைப்பிற்கு ஏற்ப, கட்டுமானப் பொருட்களை மேம்படுத்த வேண்டியது அவசியம். தயாரிப்பாளர்கள் குறைந்த செலவில் புதிய தீர்வுகளை அளிக்க வேண்டும்,'' என்றார். இந்த நிகழ்வில், 50க்கு மேற்பட்ட கட்டுமான பொருட்கள் தயாரிப்பாளர்கள், கட்டட நிறுவனங்களின் பர்ச்சேஸ் மேலாளர்கள், தற்போதைய மற்றும் எதிர்கால ரியல் எஸ்டேட் தேவைகள் குறித்து விவாதித்தனர். கிரெடாய் கோவை செயலாளர் சஞ்சனா, பொருளாளர் கார்த்திக் குமார், கிரெடாய் தமிழ்நாடு தலைவர் (தேர்வு) குகன் இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை