உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.167 கோடிக்கு 1,524 ரோடு போட ஒர்க் ஆர்டர் வழங்கியது மாநகராட்சி

ரூ.167 கோடிக்கு 1,524 ரோடு போட ஒர்க் ஆர்டர் வழங்கியது மாநகராட்சி

கோவை; கோவையில், ரூ.167 கோடிக்கு, 1,524 ரோடுகளில் வேலை செய்ய, 'ஒர்க் ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், காஸ், தொலைதொடர்பு மற்றும் மின் புதை வடம் பதிக்க, ரோடுகள் அடிக்கடி தோண்டப்படுகின்றன.ரோட்டை சீரமைக்க மேலும், 200 கோடி ரூபாயை தமிழக அரசு விடுவித்தது. அதில், முதல்கட்டமாக, 167 கோடி ரூபாய்க்கு பணிகள் துவங்க, 'டெண்டர்' கோரப்பட்டு, 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''மொத்தம், 411.27 கி.மீ., துாரத்துக்கு, 2,770 ரோடுகளுக்கு 'ஒர்க் ஆர்டர்' கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், 47.3 கி.மீ., துாரத்துக்கு, 353 ரோடு பணி முடிக்கப்பட்டு உள்ளது. 1,524 ரோடுகளில் வேலை செய்ய உள்ளோம்.ரூ.167 கோடிக்கு 'ஒர்க் ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கும். பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பணிக்காக, 393 ரோடு கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலையை முடித்ததும், அப்பகுதிகளில் ரோடு போடப்படும். மீதமுள்ள இடங்களுக்கு மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி