உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு தேவை

ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு தேவை

குடிமங்கலம்; குடிமங்கலம், கொண்டம்பட்டி ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, இ.கம்யூ., கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாநாட்டிற்கு கிளை துணைச்செயலாளர் கிட்டுசாமி தலைமை வகித்தார். கட்சிக்கொடியை மூத்த நிர்வாகி பசுபதி ஏற்றி வைத்தார். குடிமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உள்நோயாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் நெரிசலை தவிர்க்க, ரோந்து போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும். குடிமங்கலம், கொண்டம்பட்டி ஊராட்சிகளில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர் வினியோகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி சங்ககிரிநாதன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி