பொறிக்காதன் யானை ஊருக்குள் நடமாட்டம்
சிறுமுகை: சிறுமுகை அருகே 'பொறிக்காதன்' யானை, ஊருக்குள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக, 'பொறிக்காதன்' என்று மக்களால் அழைக்கப்படும், ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. நேற்று முன் தினம் அதிகாலை, காந்தையூர் பரிசல் துறை பகுதியில் யானை உலா வந்தது. பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. அதிகாலை என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 'இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், மக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வரக்கூடாது. வாகனங்களில் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்' என சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தி வரு கின்றனர்.-----