மேலும் செய்திகள்
திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் குவிந்தனர்
29-Sep-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, வடுகபாளையம் போத்தீஸ் கார்டன் செல்வவிநாயகர் மற்றும் விஸ்வநாத யோகேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. அதில், விஸ்வநாத யோகேஸ்வரருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பண மாலை சாற்றப்பட்டது. பொள்ளாச்சி சிவனடியார்கள் திருவாசக குழு காரைக்கால் அம்மையார் குழுவாக திருவாசகம் முற்றோதல் செய்தனர்.
29-Sep-2025