பேரின்பப் பெருவிழா வரும் 30ல் துவக்கம்
கோவை : இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில், கோவை பேரின்பப் பெருவிழா, வெரைட்டி ஹால் ரோடு சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வரும் 30ம் தேதி துவங்குகிறது.தொடர்ந்து மே 4ம் தேதி வரை, தினமும் மாலை 6:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், அப்போஸ்தலர் ஜவஹர் சாமுவேல், சகோதரர் டேனியல் ஜவஹர், அப்போஸ்தலர்கள் ரத்னம் பால், டேவிட் பிரகாசம், பீட்டர்சன் பால், போதகர் பெக்சல் ஜேக்கப் ஆகியோர் நற்செய்தி வழங்கி உரையாற்றுகின்றனர்.வாழ்விலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றம் பெற, இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இயேசுவின் அன்பின் ஊழியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான மேலும் தகவலுக்கு, 89400 89000 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.