உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிலுக்கு நேந்து விட்ட ஆட்டை காணவில்லை

கோவிலுக்கு நேந்து விட்ட ஆட்டை காணவில்லை

மேட்டுப்பாளையம்: கோவிலுக்கு நேந்து விட்ட ஆட்டை காணவில்லை என காரமடை போலீஸ் ஸ்டேஷனில் அதன் உரிமையாளர் புகார் அளித்தார்.கோவை மாவட்டம் காரமடை அருகே கருப்பராயன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் கிரசர் கம்பெனியில், டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் குலதெய்வ கோயிலுக்காக மூன்று ஆண்டுகளாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். தினமும் தனது வீட்டின் முன் ஆட்டை கட்டிவிட்டு வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு இவர் சாப்பிட வந்த போது, வீட்டின் முன் பகுதியில் கட்டி வைத்த ஆட்டை காணவில்லை. அக்கம் பக்கம் என விசாரித்த போதும், பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் ஆடு கிடைக்கவில்லை. இதனால் ஆட்டை கண்டுபிடித்து தருமாறு காரமடை போலீஸ் ஸ்டேஷனில் செந்தில்குமார் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ