மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
தேனியில் ஆசிரியர் தின விழா
06-Sep-2025
மேட்டுப்பாளையம்; வெல்லுகின்ற போது தட்டுகின்ற கைகளை விட, வீழுகின்ற போது தாங்குகின்ற கைகள் புனிதமானவை, என, கவிஞர் கவிதாசன் மேட்டுப்பாளையத்தில் பேசினார். மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் சார்பில், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் அமைப்பின் தலைவர் பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளியின் முதல்வர் கிரீஸ் ஈஸ்வரன் தலைமை வகித்தார். சச்சிதானந்த பள்ளி செயலர் கவிஞர் கவிதாசன், ஆசிரியர்களுக்கு விருது மற்றும் கேடயம் வழங்கி பேசியதாவது: கல்வியின் நோக்கம் மாறிக்கொண்டே இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு கல்வி முறையை மாற்றலாம். ஆனால் ஒழுக்கமும், பழக்கமும் மாறாதது. எப்படிப்பட்டவர்களையும் ஆசிரியர்களால் மட்டுமே மாற்றிவிட முடியும். வெல்லுகின்ற போது தட்டுகின்ற கைகளை விட, வீழுகின்ற போது தாங்குகின்ற கைகள் புனிதமானவை. அப்படிப்பட்ட புனிதமான கைகளை கொண்டவர்களாக, ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பெற்றோர்களே கைவிட்டாலும் ஆசிரியர்களாகிய நீங்கள், அவர்களை கைவிடக்கூடாது. ஆசிரியர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் அமைப்பின் செயலர் விவேகானந்தா அகாடமி பள்ளி முதல்வரான பத்மநாபன் நன்றி கூறினார். விழாவில் பள்ளியின் துணை முதல்வர் சக்திவேல், கல்விப்புல முதன்மையர் ஷீலா கிரேஸ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
16-Aug-2025
06-Sep-2025