உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடையில் மார்கழி மாத பஜனை துவங்கியது

காரமடையில் மார்கழி மாத பஜனை துவங்கியது

மேட்டுப்பாளையம்; மார்கழி மாதம் துவங்கியதை அடுத்து, காரமடையில் பஜனை குழுவினர் அரங்கநாதர் கோவிலை சுற்றி, அதிகாலையில் பஜனை பாடி வருகின்றனர்.காரமடையில் பஜனை குழுவினர், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முழுவதும் பஜனை பாடி வருவர். இந்த ஆண்டு மார்கழி மாதம் நேற்று துவங்கியது. அதிகாலை, 5:00 மணிக்கு ஸ்ரீ தாச பளஞ்சிக மகாஜன சங்க திருப்பாவை பஜனை வழிபாட்டு குழுவினர், ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி கோவில் பஜனை குழுவினர், திருமுருக பக்தர்கள் பஜனை குழுவினர் ஆகியோர் காரமடை நகரில் தேர் செல்லும் நான்கு ரத வீதிகள் வழியாக பஜனை பாடி வந்தனர்.அப்போது தேர் செல்லும் வீதிகளில் உள்ள வீடுகள் முன், பக்தர்கள் கோலமிட்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து, பஜனை குழுவினரை வரவேற்றனர். பஜனை குழுவினர் சிறிது நேரம் நின்று பஜனை பாடி சென்றனர். இந்த நிகழ்வில் பஜனை குழுவினருடன் பக்தர்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ