உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஸ்வரூபமெடுக்கும் குப்பை கிடங்கு விவகாரம்! எம்.எல்.ஏ., போலீஸ் டி.எஸ்.பி., ஆய்வு

விஸ்வரூபமெடுக்கும் குப்பை கிடங்கு விவகாரம்! எம்.எல்.ஏ., போலீஸ் டி.எஸ்.பி., ஆய்வு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில் உள்ள குப்பை கிடங்கில், எம்.எல்.ஏ., மற்றும் டி.எஸ்.பி., ஆய்வு செய்தனர்.கிணத்துக்கடவு, கிரீன் கார்டன் சிட்டியில் உள்ள பாறை குழியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை கொட்டப்படுகிறது. கடந்த மாதம் இங்கு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் வசிப்போருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதை தொடர்ந்து இங்கு குப்பை கொட்டுவதை எதிர்த்தனர்.இதனால், பேரூராட்சி நிர்வாகம் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறை குழியில் குப்பை கொட்ட முடிவு செய்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் மனு அளித்தனர்.இந்நிலையில், நேற்று பேரூராட்சி நிர்வாகத்தினரால் மீண்டும் குப்பை கொட்டப்பட்டது. இதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அப்பகுதியை பார்வையிட்டனர்.பொதுமக்கள் மனு அளித்தால், நேற்று, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், டி.எஸ்.பி., வெற்றிச்செல்வன் ஆகியோர் குப்பை கிடங்கை ஆய்வு செய்தனர்.எம்.எல்.ஏ., தாமோதரன் பொதுமக்களிடம் கூறுகையில், ''குப்பை கிடங்கு மற்றும் நீர் உள்ள பாறை குழி ஆய்வு செய்யப்பட்டது. இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் பேசி, இங்கு நிலவும் சூழல் குறித்து எடுத்துரைக்கப்படும்,'' என்றார்.டி.எஸ்.பி., வெற்றிச்செல்வன் கூறுகையில், ''பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் குப்பை கொட்டும் இடம் இருப்பதால், பொதுமக்கள் நலன் கருதி மாற்று இடம் தேர்வு செய்ய பேரூராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதுவரை வெள்ளலுார் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் குப்பை கொட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ