உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொப்பரை கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.175.60

கொப்பரை கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.175.60

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி, வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 1.38 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது.பொள்ளாச்சி, வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று முன்தினம் கொப்பரை ஏலம் நடந்தது. இதில், முதல் தர கொப்பரை, 15 மூட்டைகள், 163.50 முதல் 175.60 ரூபாய்க்கு விற்பனை ஆனது.இதே போன்று, இரண்டாம் தர கொப்பரை, 20 மூட்டைகள், 135 முதல் 152 ரூபாய் வரை விற்பனை ஆனது. மொத்தம், 35 மூட்டைகள், 1.38 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது.இதனால், 10 விவசாயிகள், 4 வியாபாரிகள் பயனடைந்தனர். ஏலத்தில், முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன், விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் வேளாண் உதவி அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி