உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண் வீடு கான்கிரீட் வீடாகிறது

மண் வீடு கான்கிரீட் வீடாகிறது

வால்பாறை; தொல்குடி திட்டத்தின் கீழ், பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டும் பணி துவங்கியது. மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறையில், நெடுஞ்குன்று செட்டில்மென்ட் பகுதியில், வில்லோனி நெடுங்குன்று, சங்கரன்குடி, பாலகணாறு, கல்லார், உடுமன்பாறை. பரமன்கடவு உள்ளிட்ட பல்வேறு செட்டில்மென்ட்களில் மண் சுவர் வீடுகள் தான் உள்ளன. இந்த வீடுகளை கான்கீரீட் வீடுகளாக மாற்றித்தரக்கோரி, பழங்குடியின மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் தொல்குடி திட்டத்தின் கீழ், வால்பாறை மலைப்பகுதியில் மொத்தம் உள்ள, 183 மண் சுவர் வீடுகள், கான்கீரீட் வீடுகளாக மாற்ற திட்டமிட்டு, அதற்கான பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வனப்பகுதியில் விவசாயம் செய்து பிழைக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகளின் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், தற்போது மாநில அரசின் சார்பில் தொல்குடி திட்டத்தின் கீழ், தலா 5 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 183 வீடுகள் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வால்பாறை அடுத்துள்ள நெடுங்குன்று செட்டில்மென்ட் பகுதியில் வீடுகள் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. பிற செட்டில்மென்ட் பகுதிகளில் விரைவில் பணிகள் துவங்கப்படும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ