உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவுசார் மையத்துக்கு விசிட் பண்ணுங்க! அழைக்கிறது நகராட்சி நிர்வாகம்

அறிவுசார் மையத்துக்கு விசிட் பண்ணுங்க! அழைக்கிறது நகராட்சி நிர்வாகம்

பொள்ளாச்சி ;பொள்ளாச்சி நகராட்சி அறிவுசார் மையத்துக்கு, அரசு கல்லுாரி மாணவர்கள் சென்று, அங்கு போட்டித்தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள இருக்கும் புத்தகங்கள், வசதிகளை பார்வையிட்டனர்.பொள்ளாச்சி நகராட்சி நுாலகம் மற்றும் அறிவுசார் மையம், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே செயல்படுகிறது. இங்கு போட்டித்தேர்வுக்கு தயராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், கம்ப்யூட்டர் வசதி உள்ளது. இதை பயன்படுத்தி மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், அறிவுசார் மையத்தை கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லுாரி மாணவர்கள், மையத்துக்கு அழைத்து வந்து பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.பொள்ளாச்சி அரசு கலை கல்லுாரி மாணவர்கள், நேற்று அறிவுசார் மையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். போட்டித்தேர்வுக்கு தேவையான புத்தகங்கள், கம்ப்யூட்டர் வசதிகள் உள்ளிட்டவை இருப்பதை மாணவர்கள் பார்வையிட்டனர்.நகராட்சி கமிஷனர் கணேசன், தலைவர் சியாமளா ஆகியோர், மாணவர்களிடம் அறிவுசார் மையத்தில் உள்ள வசதிகள் குறித்து விளக்கினர்.நகராட்சி கமிஷனர் கூறியதாவது:பொள்ளாச்சி அறிவுசார் மையத்தைஅனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கல்லுாரி மாணவர்களை அழைத்து வந்து, பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர்களை அழைத்து வருவதற்கு, சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வாகன உதவி செய்தனர். தினமும், மாணவர்களை அழைத்து வந்து மையத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கல்லுாரியில் பயின்று வெளியே வரும் மாணவர்கள், போட்டித்தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ