உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுார் நகராட்சியில் வார்டுகள் எண்ணிக்கை உயரும்

சூலுார் நகராட்சியில் வார்டுகள் எண்ணிக்கை உயரும்

சூலுார்; சூலுார் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தற்போது உள்ள சூலுார் பேரூராட்சி 10.96 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது.18 வார்டுகள் உள்ளன. ஆண்டுக்கு வருமானம், ரூ. 6 கோடி ஆகும். 2011 ஆண்டு கணக்கின்படி, 27 ஆயிரத்து, 909 மக்கள் வசித்தனர். தற்போது, அது இரு மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும், காங்கயம் பாளையம் மற்றும் கலங்கல் ஊராட்சி, சூலுார் பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டு, சூலுார் நகராட்சியாக உள்ளது. இந்த இரு ஊராட்சிகளின் மூன்றாண்டு சராசரி வருமானம், 50 லட்சம் ரூபாய் ஆகும். சூலுார் நகராட்சியாகும் போது, மொத்த பரப்பளவு அதிகரிக்கும்.வார்டுகளின் எண்ணிக்கை, 28 க்கும் மேல் அதிமாகும் என தெரிகிறது. மேலும் பணியாளர்களின் எண்ணிக்கை, தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி