திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தவருக்கு கத்திக்குத்து
போத்தனூர்; கோவை, குறிச்சி, காந்திஜி சாலையை சேர்ந்தவர் பாபு, 32. கடந்த வாரம் இவர் தனது வீட்டினருகே வசிக்கும் பெண்ணை, பஸ் ஸ்டாப்பிற்கு தனது பைக்கில் கொண்டு சென்று இறக்கி விட்டார்.சில நாட்களுக்குப் பின், அப்பெண் பாபுவிற்கு போன் செய்துள்ளார். அப்போது பாபு, தனது கடையின் திறப்பு விழாவிற்கு வருமாறு கூறியுள்ளார்.இதனை தவறாக புரிந்து கொண்ட அப்பெண், இதுகுறித்து தனது கணவர், மற்றும் சகோதரர் கவியரசுவிடம் கூறியுள்ளார்.இதையடுத்து கவியரசு, 16ம் தேதி பிள்ளையார்புரம் சாலையிலுள்ள காலியிடத்திற்கு வருமாறு பாபுவிடம் கூறியுள்ளார். அங்கு சென்ற பாபுவை, கவியரசு கத்தியால் குத்தியுள்ளார்.உடனிருந்த விமல்குமார், பிரவீண் ஆகியோரும் தாக்கி, மிரட்டல் விடுத்து சென்றனர். மருத்துவமனையில் சேர்ந்த பாபுவின் புகாரில், தாக்கிய மூவரையும் சுந்தராபுரம் போலீசார் தேடுகின்றனர்.