உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கமிஷனர் சொல்லி கேட்காத ரவுடியின் மனு டிஸ்மிஸ்

கமிஷனர் சொல்லி கேட்காத ரவுடியின் மனு டிஸ்மிஸ்

கோவை; மாநகரில் இருந்து வெளியேற, போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ரவுடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி டிஸ்மிஸ் செய்தார். கோவை மாநகர பகுதிகளில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்கள், சென்னை சிட்டி போலீஸ் சட்டத்தின் கீழ், மாநகரை விட்டு ஆறு மாதங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவ்வகையில், ஜன., 13ம் தேதி 27 பேரை, மாநகரில் இருந்து வெளியேற்றி போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். உத்தரவை மீறி மாநகருக்குள் வரும் ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கொலை, கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கணபதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பாலகிருஷ்ணன் மாநகரில் இருந்து வெளியேற்றப்பட தகுதியானவர் என கூறி, அவரின் மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ