தவற விட்ட பணத்தை மீட்டு கொடுத்த போலீஸ்
ஆனைமலை: ஆனைமலை அருகே, அம்பராம்பாளையம் ரோட்டில் ஆனைமலை போலீஸ் ஏட்டு பிரபு, ரோந்து பணி மேற்கொண்டார்.அப்போது, கிழே கிடந்த சிவப்பு நிற பேக்கில், 51,400 ரூபாய் பணம் இருப்பதை கண்டார்.அந்த பேக் யாருடையது என விசாரித்த போது, கேரள மாநிலத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர்களுடையது என்பது தெரியவந்தது. அதன்பின், மாணவர்களிடம் விசாரித்து, ஆவணங்களை சரிபார்த்து, பணத்தை ஒப்படைத்தார். போலீஸ் ஏட்டின் இந்த செயலுக்கு, மற்ற போலீசாரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.