மேலும் செய்திகள்
இளநீர் விலை ரூ.3 குறைந்தது
18-Nov-2024
பொள்ளாச்சி; ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, இரண்டு ரூபாய் குறைந்துள்ளது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட, இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டு, 26 ரூபாய் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 10,250 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருவதாலும், வடமாநிலங்களில் குளிரான சீதோஷ்ண நிலை இருப்பதால், இளநீரின் விலை குறைக்கப்படுகிறது. தற்சமயம் சிவப்பு இளநீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.அதில், 95 சதவீதம் மகசூல் குறைந்துள்ளது. எனவே சிவப்பு இளநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சிவப்பு இளநீர் 28 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யவும். வியாபாரிகளிடம் விலையைக் கேட்டு பெறவும்.இவ்வாறு, அவர் கூறினார்.
18-Nov-2024