உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இளநீர் விலை ஒரு ரூபாய் உயர்வு

 இளநீர் விலை ஒரு ரூபாய் உயர்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையை ஒப்பிடுகையில், 24 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது : இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 24 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 10,250 ரூபாய். இளநீர் வியாபாரிகளும் விவசாயிகளின் கஷ்டமான சூழ்நிலையை உணர்ந்து, இளநீர் விலையை உயர்த்தி வெளியூர் வியாபாரிகளுக்கு விற்க வேண்டும். 45 நாட்களுக்கு மேல் வயதான இளநீரை உடனடியாக விற்க வேண்டும். வயது குறைவான இளநீரை பொறுத்திருந்து விவசாயிகள் விற்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ