உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோடு படுமோசம்; ஓட்டுநர்கள் அவதி

ரோடு படுமோசம்; ஓட்டுநர்கள் அவதி

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, காணியாலம்பாளையம் பகுதியில் ரோடு சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். கிணத்துக்கடவு அருகே உள்ள, காணியாலம்பாளையத்தில் இருந்து கோவில்பாளையம் செல்லும் ரோட்டில் அதிகளவு லாரி, டெம்போ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில், ஆங்காங்கே தனியார் நிறுவனங்கள் இருப்பதால் காலை மற்றும் மாலை நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. ஆனால், ரோட்டில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். சில நேரங்களில் சேறும் சகதியும் நிறைந்த பகுதியில் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை