UPDATED : நவ 30, 2026 12:00 AM | ADDED : நவ 29, 2026 11:44 PM
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையம் பகுதியில், த.வெ.க., அலுவலக திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது : பத்து ரூபாய் பாட்டில் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. எந்த சூழ்நிலையில் பணம் வாங்க மாட்டோம்; வாங்கவும் விடமாட்டோம். இந்த நடைமுறையை டாஸ்மாக் துறையில் செயல்படுத்துகிறோம். கள்ளுக்கடைகளை திறப்பது குறித்து ,முதல்வரின் கவனத்தில் உள்ளது. நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும்போது கள்ளுக்கடை பிரச்னை முக்கியமல்ல. இவ்வாறு, தெரிவித்தார். அவரிடம் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர், ‘‘என் துறை சார்ந்த மற்றும் என் பொறுப்பு மாவட்டம் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். முக்கிய பிரச்னைகள் குறித்து கூறுவதற்கு செய்தி தொடர்பாளர்கள் என, அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களே பதில் அளிப்பர்’’ என, மழுப்பலாக பதில் கூறிச்சென்றார்.