உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிக்கு சுற்றுச்சுவரில்லை கேள்விக்குறியான பாதுகாப்பு

பள்ளிக்கு சுற்றுச்சுவரில்லை கேள்விக்குறியான பாதுகாப்பு

வால்பாறை ; அய்யர்பாடி ரோப்வே துவக்கப்பள்ளிக்கு, சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.வால்பாறை அடுத்துள்ளது அய்யர்பாடி ரோப்வே முதல்பிரிவு. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில், 16க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.குடியிருப்பு பகுதியின் மத்தியில் பள்ளி அமைந்திருந்தாலும், அடிக்கடி எஸ்டேட் பகுதிக்கு வரும் யானைகள், பள்ளி சத்துணவு கூடத்தை சேதப்படுத்துகின்றன.பொதுமக்கள் கூறுகையில், பழமையான இந்தப்பள்ளி தற்போது புதுப்பிக்கப்பட்டு, மிக அழகாக காட்சியளிக்கிறது. ஆனால், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பகல், இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, நகராட்சி சார்பில், பள்ளி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்.வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி