உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாட்டி வதைக்கும் கோடை வெயில்; பாதுகாப்புக்கு டாக்டர் அறிவுரை

வாட்டி வதைக்கும் கோடை வெயில்; பாதுகாப்புக்கு டாக்டர் அறிவுரை

பொள்ளாச்சி; வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், வழக்கத்துக்கு மாறாக, நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அவ்வகையில், நேற்று, 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், சூழலுக்கு ஏற்றவாறு உடலின் வெப்ப நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.வெயிலால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படக் கூடும். அதனால், வெப்ப பாதிப்பில் இருந்து, மக்கள் தங்களை தற்காத்து கொள்ளலாம் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, பொள்ளாச்சி தெற்கு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது:வெயில் காலங்களில், உடலில் நீர்ச்சத்து குறையாமல் சமநிலையில் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். காரணம், வெயில் காலத்தில், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக அதிகளவு நீர்ச்சத்து வெளியேறும்.நீர்ச்சத்து குறைந்தால், தசைவலி, அதீத அசதி, மயக்கம் என பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும். எனவே, உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.பகல் நேரத்தில், வெளியில் செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். நீர் ஆகாரமான ஓ.ஆர்.எஸ்., கரைசல், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அருந்தலாம்.காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருத்தல் வேண்டும். குறிப்பாக, முதியவர்கள், பெண்கள் வெயிலின்போது, வெளியே செல்ல வேண்டாம். உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும் போது, உடனடியாக டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை