உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டாம் பருவ புத்தகங்கள் வந்தாச்சு

இரண்டாம் பருவ புத்தகங்கள் வந்தாச்சு

கோவை; கோவை மாவட்டத்தி ல், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியுள்ளது. அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பாட நுால்கள், நேற்று முதல் வட்டாரக் கல்வி அலுவலகங்களின் மூலம், அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. 171 பள்ளிகளுக்கு 67,556 பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் நான்கு செட் சீருடைகள் வழங்கப்படும். அதன்படி, 24,947 மாணவர்களுக்கு மூன்று செட் சீருடைகள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், நான்காம் செட் சீருடைகள் 12,397 மாணவர்களுக்கும் 12,550 மாண வியருக்கும் வழங் கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ