உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ் திரை உலகம் கலகலப்பாக இருக்கிறது; சொல்கிறார் நிழல்கள் ரவி

தமிழ் திரை உலகம் கலகலப்பாக இருக்கிறது; சொல்கிறார் நிழல்கள் ரவி

கோவை; கோவை நகைச்சுவை சங்கத்தின், 23வது நகைச்சுவை நிகழ்ச்சி, கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி அரங்கில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, கோவை டானி சீட்டர் நிர்வாக இயக்குனர் சிவராமன் கந்தசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் நிழல்கள் ரவி பேசியதாவது:நான் கோவையில் உள்ள மணி மேல்நிலை பள்ளியில்தான் படித்தேன். பள்ளியில் படிக்கும் போதே சினிமா மீது ஆசை வந்து விட்டது. பட்டம் வாங்கிய பிறகு, நீ எங்கு வேண்டும் என்றாலும் போ என்று அப்பா சொல்லி விட்டார்.கோவை அரசு கலைக்கல்லுாரியில், எகனாமிஸ் படித்து முடித்து விட்டு சென்னைக்கு போய், சினிமாவில் சான்ஸ் தேடினேன். சில ஆண்டுகள் கஷ்டப் பட்டேன். பிறகு இயக்குனர் பாரதிராஜா என்னை, 'நிழல்கள்' படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தார்.சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 450 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். தொடர்ந்து நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என, எல்லா பாத்திரங்களிலும் நடித்து இருக்கிறேன்.இப்போது சினிமாவில் புதிய இயக்குனர்கள் வந்துள்ளனர். நல்ல திரைப்படங்களை எடுக்கின்றனர். தமிழ் திரை உலகம் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் இருக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.எஸ்.பி.எஸ்., குரூப் நிர்வாக இயக்குனர் சண்முகசுந்தரம், கோவை நகைச்சுவை சங்க செயலாளர் தனபால் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை