| ADDED : டிச 05, 2025 07:21 AM
கோ வையின் பிரபலமான அன்னபூர்ணா ஹோட்டல்ஸ், நம்பகமான இயற்கை ஸ்கின் கேர் பிராண்டான வில்வாவுடன் இணைந்து, பில்டர் காபி, ரோஸ் மில்க் என இரண்டு புதிய லிமிடெட் எடிசன் லிப் பாம்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பில்டர் காபி லிப் பாமில், 10% உண்மையான அன்னபூர்ணா காபி எக்ஸ்ட்ராக்ட் சேர்க்கப்பட்டுள்ளது. மெல்லிய பழுப்பு நிறம் கொண்ட இந்த லிப் பாம், இயல்பான தென்னிந்திய பில்டர் காபியின் மணத்தைக் கொடுக்கிறது. உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும், அன்னபூர்ணாவின் காபியை சுவைத்த உணர்வை நீங்கள் பெறலாம் வில்வாவின் பண்ணையில் விளையும் பன்னிர் ரோஜா இதழ்களை கொண்டு ரோஸ் மில்க் லிப் பாம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இளஞ்சிவப்பு நிற லிப் பாம், இனிய வாசனையுடன், குளிர்ந்த ரோஸ் மில்க் குடிக்கும் அனுபவத்தை வழங்குகிறது. இந்த லிப் பால்ம்கள் உதடுகளை நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். பில்டர் காபி மற்றும் ரோஸ் மில்க் லிப் பாம்கள் தலா ரூ.395க்கும், இரண்டும் காம்போ பேக்கி,ல் ரூ.699க்கும் கிடைக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, மறுசுழற்சி செய்யக்கூடிய பேக்கேஜிங்கில் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது அனைத்து அன்னபூர்ணா ஹோட்டல் அவுட்லெட்கள், வில்வா பிளாக்சிப் ஸ்டோர் மற்றும் ஆன்லைனிலும் கிடைக்கின்றது.