மேலும் செய்திகள்
சந்தன மரம் வெட்டி கடத்தல்; வனத்துறை விசாரணை
10-Oct-2024
கோவை : ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து சந்தன மரத்தை, அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர்.ரேஸ்கோர்ஸில் பல்வேறு இடங்களில், சந்தன மரங்கள் இருக்கின்றன. ரேஸ்கோர்ஸ் தொழிலாளர் துறை அலுவலர்கள் குடியிருப்பில், பத்து வீடுகள் உள்ளன. அதில் 4ம் நம்பர் வீடு காலியாக உள்ளது. அங்கு 10 வயதுடைய சந்தன மரம் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் அந்த மரத்தை வெட்டி, திருடிச்சென்றுள்ளனர். வெட்டிய மரம் கீழே விழும்போது சத்தம் கேட்காமல் இருக்க, மரத்தின் கிளைகளில் 'டெலிபோன் ஒயரை' கட்டி, கீழே விழாத வகையில், சந்தன மரத்தின் தண்டை மற்றும் எடுத்துச்சென்றுள்ளனர்.
10-Oct-2024