உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்குது! முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு

தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்குது! முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு

கிணத்துக்கடவு; ''தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி வருகிறது,'' என, முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.கிணத்துக்கடவு சூலக்கல் பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அம்மா கோப்பை கிரிக்கெட் திருவிழா மூன்று மாதங்களாக நடந்தது. போட்டியை, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி கோவை மாவட்ட துணை செயலாளர் யுவராஜ் ஆகியோர் நடத்தினர்.போட்டியில் முதல் பரிசை கக்கடவு அணியும், இரண்டாம் பரிசு உடுமலை, மூன்றாம் பரிசு பழநி மற்றும் நான்காம் பரிசு பல்லடம் அணிகள் பெற்றன. கோப்பை மற்றும் பரிசுகளை எம்.எல்.ஏ.,கள் வழங்கினர்.எம்.எல்.ஏ., தாமோதரன் பேசுகையில், ''தி.மு.க., மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கொலை, கொள்ளை, கஞ்சா புழக்கம் என அனைத்தும் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், இது போன்ற செயல்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை,'' என்றார்.எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும். இளைஞர்கள் சக்தி நம்மிடம் உள்ளது. இளைஞர்கள், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க, இது போன்று பல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வென்று, ஆட்சி அமைக்கும்,'' என்றார்.முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:விளையாட்டு போட்டிக்கு அதிக திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார். இது மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் முறையாக செயல்படுத்த முடியவில்லை. அதற்கு மாறாக கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது அரசு பணியாளர்களே இந்த ஆட்சியை வெறுக்கின்றனர். அ.தி.மு.க.,வுக்கு மக்கள் செல்வாக்கு பெருகி வருகிறது. தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி வருகிறது.இவ்வாறு, பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை