உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மறு ஏலத்தில் பேரூராட்சிக்கு ரூ. 72 லட்சம் வருமானம்; போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

மறு ஏலத்தில் பேரூராட்சிக்கு ரூ. 72 லட்சம் வருமானம்; போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

அன்னுார்,; போலீஸ் பாதுகாப்போடு நடந்த வார சந்தை மறு ஏலத்தில் பேரூராட்சிக்கு 72 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.அன்னுார், ஓதிமலை சாலையில் பேரூராட்சி வார சந்தை சனிதோறும் கூடுகிறது. பல ஆயிரம் மக்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பொருட்கள் விற்கின்றனர்.சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம், கடந்த மாதம் 27ம் தேதி நடந்தது. அப்போது போதிய விளம்பரம் செய்யவில்லை என்று புகார் கூறி இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.நேற்று போலீசார் பாதுகாப்போடு ஏலம் நடந்தது. ஏலத்தில் 17 பேர் பங்கேற்றனர். வார சந்தை கடந்த முறை மாதம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. தற்போது மாதம் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு, குமாரபாளையம் ஈஸ்வரி பெரியசாமி என்பவர் ஏலம் எடுத்தார். பஸ் ஸ்டாண்டில் உள்ள இருசக்கர வாகன ஸ்டாண்டில் கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் நடந்தது. இது கடந்த ஆண்டு மாதம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. நேற்று மாதம் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு சந்திரமோகன் என்பவர் ஏலம் எடுத்தார். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார், செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் ஏலத்தை நடத்தினர். வார சந்தை ஏலத்தால், ஒரு ஆண்டுக்கு 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், இருசக்கர வாகனம் ஸ்டாண்ட் ஏலம் மூலம் 25 லட்சத்து 20 ஆயிரம் என 72 லட்சம் ரூபாய் பேரூராட்சிக்கு வருவாய் கிடைத்துள்ளது.'ஒவ்வொரு ஆண்டும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்,' என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை