ஜீப்பில் இருந்து தவறி விழுந்தவர் பலி
பொள்ளாச்சி : ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதுாரைச் சேர்ந்தவர் ரோகித்ராயன், 45. இவர், 21ம் தேதி இரவு, 11:00 மணிக்கு, ஆனைமலை -சேத்துமடை ரோட்டில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் உணவு உட்கொண்டு, மகேந்திரா ஓப்பன் டைப் ஜீப்பில் வீடு திரும்பினார்.ரோகித்ராயன், பின்னால் அமர்ந்திருக்க, பிரதீப் என்பவர் ஜீப்பை ஓட்டினார். ஜீப் சேத்துமடை ரோடு, அண்ணாநகர் பகுதியில் சென்ற போது, அங்கிருந்த வேகத்தடையில் அதிவேகமாக ஏறி இறங்கியது. இதில், பின்னால் அமர்ந்திருந்த ரோகித்ராயன், நிலை தடுமாறி, ரோட்டில் விழுந்தார்.தலையில் படுகாயமடைந்த நிலையில், பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதனை செய்ததில், ஏற்கனவே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.