உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதள பாதாளத்துக்கு போகிறது நீர்மட்டம்

அதள பாதாளத்துக்கு போகிறது நீர்மட்டம்

கோவை: மாவட்டத்தில் குளம், குட்டை, ஓடை, தடுப்பணை என 1,500 நீர்நிலைகள் உள்ளன. மாநில நிலத்தடி நீர் கண்காணிப்பு மையம் சார்பில், மாவட்டத்தில் 27 கண்காணிப்பு நிலையங்கள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் கண்காணிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டு ஜன.1 முதல் நவ.26 வரை, ஆறு மணி நேர இடைவெளியில் 15,859 பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜனவரியில் சராசரி நிலத்தடி நீர்மட்டம் 24.64 மீட்டர் ஆழத்தில் இருந்தது. ஏப்ரலில் 32.23 மீட்டராகவும், ஜூனில் 34.08 மீட்டராகவும் குறைந்தது. நவம்பரில் 15.59 மீட்டராக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சூலூர் வட்டத்தின் சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 200 மீட்டருக்கும் கீழே சென்றுள்ளது. குறைந்த நிலத்தடி நீர்மட்டம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் கோவை உள்ளது. நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பாதுகாக்கவும், மழைநீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை முறையாகச் சேமிக்கவும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை