உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெரியசாமி துாரனின் படைப்புகள் சிறப்பு

பெரியசாமி துாரனின் படைப்புகள் சிறப்பு

எ ழுத்தாளர் பழனி கிருஷ்ணசாமி எழுதிய, 'மனிதன் உடம்பல்ல; பெரியசாமித்தூரனின் பண்பாட்டுப் பங்களிப்பு' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது. நுாலை கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்டு பேசியதாவது: பெரியசாமித்துாரன், 20ம் நுாற்றாண்டில் வாழ்ந்த மிக சிறந்த இலக்கிய ஆளுமை. அவரை தமிழ் சமூகம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். ஐரோப்பிய அறிவுசார் நாகரிகத்துக்கு இணையாக கருதப்படும் தமிழ் கலைக் களஞ்சியத்தை உருவாக்கி தந்தவர். பெரியசாமி துாரனின் படைப்புகளை படித்து பாதுக்காக வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கவிஞர்கள் கணகுறிஞ்சி, சுகுமாரன் ஆகியோர் நுால் குறித்து கருத்துரை வழங்கினர். நுாலாசிரியர் பழனி கிருஷ்ணசாமி ஏற்புரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை