உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை உண்டு

30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை உண்டு

கோவை: மாநகராட்சிக்கு சொத்து வரியே பிரதான வருவாய். ஏப். - செப். மற்றும் அக். - மார்ச் என ஆண்டுக்கு இரு தவணைகளில் வரி வசூலிக்கப்படுகிறது. 5.97 லட்சம் வரி செலுத்துவோர் உள்ளனர். 2025-26 நிதியாண்டுக்கு 523 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். ஏப். - செப். வரையிலான முதல் தவணை, 134 கோடி ரூபாய் வசூலானது. அக். 1 முதலான இரண்டாவது தவணை வசூலிக்கும் பணியில் பில் கலெக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை 11 மணி வரை, 102 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்நிதியாண்டு கணக்கில் இன்னும் 287 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். இதற்காக, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இரண்டாவது தவணை சொத்து வரியை அக். 30க்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. செப். 30 வரையிலான முதல் தவணை செலுத்தாமல் இருந்தால், ஒரு சதவீதம் அபராத வரி விதிக்கப்படுகிறது. இதேபோல், மாநகராட்சி பகுதிகளில், 3.22 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டுக்கு ரூ.45.98 கோடி கட்டணம் வசூலிக்க வேண்டும். நேற்று காலை வரை, 20.65 கோடி வசூலாகி உள்ளது. இன்னும் ரூ.25.33 கோடி வசூலிக்க வேண்டியிருக்கிறது. கோவை தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்றாலும் கூட, மாநகராட்சிக்கு 7 3 ஆயிரத்து, 494 பேரே தொழில்வரி செலுத்துகின்றனர். இவ்வகையில் 51.67 கோடி வருவாய் கிடைக்கும். இதுவரை 21 கோடி வசூலாகியிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை