உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோடுகள் சந்திப்பு பகுதிகளில் வேகத்தடை இல்லாததால் தவிப்பு

ரோடுகள் சந்திப்பு பகுதிகளில் வேகத்தடை இல்லாததால் தவிப்பு

வால்பாறை; வால்பாறையில், ரோடுகள் சந்திக்கும் இடங்களில் வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை மலைப்பகுதியில், அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படாமல் இருக்க, நெடுஞ்சாலைத்துறை முக்கியமான இடங்களில் வேகத்தடை அமைத்துள்ளது. மலைப்பாதையில், வனவிலங்குகள் அதிகளவில் பகல் நேரத்தில் ரோட்டை கடப்பதால், பல்வேறு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கவர்க்கல், அய்யர்பாடி, புதுத்தோட்டம், வால்பாறை நகர், ஸ்டேன்மோர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாதா கோவில் சந்திப்பில் ஐந்து ரோடுகள் பிரியும் இடத்திலும், பழைய வால்பாறை ரோட்டில் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடங்களிலும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால், இந்த ரோட்டில் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: சமீப காலமாக எஸ்டேட் பகுதியில், பகல் நேரத்திலேயே யானை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுகின்றன. வால்பாறை நகரிலிருந்து, சோலையாறுடேம் செல்லும் ரோட்டில் பல்வேறு இடங்களில் வனவிலங்குகள் நடமாடுகின்றன. சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் செல்லும் இந்த ரோட்டில், முக்கிய சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விபத்து தவிர்க்க, மாதாகோவில் சந்திப்பு, பழைய வால்பாறை சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை