உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இருப்பதோ இத்தனியூண்டு இட;ம் அதிலும் பயணிகள் படுத்து உறக்கம்

இருப்பதோ இத்தனியூண்டு இட;ம் அதிலும் பயணிகள் படுத்து உறக்கம்

கோவை; கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை, காட்சிப் பொருளாகவே உள்ளன.இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷனின் நுழைவாயில் பகுதி, தனிநபர்கள் உறங்குவதற்கும், நாய்களின் இருப்பிடமாகவும் மாறியுள்ளது. இதனால், பயணிகளுக்கு அசவுகரியம், பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதாக, புகார் எழுந்துள்ளது.அதேபோல், பிளாட்பார்ம், 5 மற்றும் 6 ஆகியவற்றில், லிப்ட் இயங்கவில்லை. இவற்றை சரி செய்ய கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் சார்பில், தெற்கு ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அமைப்பின் தலைவர் ஜெயராமன், தெற்கு ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இப்பிரச்னையை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kundalakesi
ஜூலை 15, 2025 13:03

பீக் ஹவரில் கார் உள்ளே செல்ல முடியாது அந்த ரயில் உணவகம் தேவை இல்லாத ஒன்று. அதை அகற்றி விட்டு பேருந்து நிறுத்தம் அல்லது மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை