உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சென்டம் பெற்ற மாணவர்கள் அதிகரிப்பு கட்-ஆப் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

சென்டம் பெற்ற மாணவர்கள் அதிகரிப்பு கட்-ஆப் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

கோவை,; இந்தாண்டு முழு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இன்ஜி., மருத்துவம், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கட்-ஆப் அதிகரிக்கும் என, கல்வியாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து இன்ஜி., மருத்துவம், வேளாண் ஆகியவற்றுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளன. இந்தாண்டு, முக்கிய பாடங்களில் சென்டம் அதிகரித்துள்ளதால், இன்ஜினியரிங் கட்-ஆப் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ,கல்வியாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:இந்தாண்டு கணக்கு, இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் சென்டம் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டை விட இயற்பியலில், 492, வேதியியலில், 2,710, கணிதத்தில், 435, உயிரியலில், 445 சென்டம் அதிகரித்துள்ளது.2024ல் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய மூன்றையும் கூட்டினால், 3,691 மாணவர்கள் சென்டம் பெற்றனர். ஆனால், இந்தாண்டு, 7,328 என, சென்டம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதனால், கட்-ஆப் அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.இதேபோல், உயிரியியல், தாவரவியல் பாடங்களில் சென்டம் அதிகரித்துள்ளது. விலங்கியல் பாடத்தில் மட்டுமே குறைந்துள்ளது. சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் கால்நடை மருத்துவத்துக்கு, 0.5 - 1, மீன்வளத்துறையில், 1 - 1.5, தோட்டக்கலை, வேளாண், காடுகளை வளர்த்தல், பராமரித்தல், 2 - 3 என, கட்-ஆப், அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்தாண்டு, வணிகவியல் பாடத்துக்கு நடப்பாண்டு கட்-ஆப் குறைய வாய்ப்புள்ளது. கடந்தாண்டு, 6,142 மாணவர்கள் சென்டம் எடுத்திருந்தனர். இந்தாண்டு, 1,624 மாணவர்கள் சென்டம் எடுத்துள்ளனர்.அதேபோல், கணக்கியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிக கணக்கியல் பாடங்களிலும், மிகக்குறைந்த மாணவர்களே சென்டம் பெற்றுள்ளனர். இதன் காரணமாக கட்-ஆப் மதிப்பெண் குறையும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை