மேலும் செய்திகள்
லால்பாக் நுாலகம் மூடல்; வாசகர்கள் வருத்தம்
04-Oct-2024
வால்பாறை; ஊர்ப்புற நுாலகத்தில் போதிய அடிப்படை வசதி இல்லாததால், வாசகர்கள் விரக்தியில் உள்ளனர்.நுாலகத்துறை சார்பில் வால்பாறை, நகர், காடம்பாறை ஆகிய இடங்களில் கிளை நுாலகமும், அட்டகட்டி பகுதியில் பகுதி நேர நுாலகமும், சோலையாறு நகர் பகுதியில் ஊர்ப்புற நுாலகமும் செயல்படுகிறது.இந்நிலையில், சோலையாறு நகரில் அமைந்துள்ள ஊர்ப்புற நுாலகத்தில் போதிய நுால்கள் இருந்தாலும், வாசகர்கள் அமர்ந்து படிக்க இருக்கை வசதி கூட இல்லை. இதனால் நுாலகத்திற்கு வரும் வாசகர்கள், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.சோலையாறு நகர் வாசகர்கள் கூறியதாவது:சோலையாறு நகர் சுற்றியுள்ள பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளனர். இவர்கள், இந்த நுாலகத்தை தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.ஆனால் நுாலகத்தில், மழையின் போது, உள்ளே செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. எந்த நேரத்தில் நுாலகம் இடிந்து விழுமோ என்ற நிலையில், வாசகர்கள் அமர்ந்து படிக்கின்றனர்.பெஞ்ச், டேபிள் கூட இல்லை. இதனால் நுாலகத்திற்கு வாசகர்கள் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். வாசகர்கள் நலன் கருதி வேறு இடத்திற்கு நுாலகத்தை மாற்றி, போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
04-Oct-2024