உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடிப்படை வசதிகளில் குறைவு இருக்கக்கூடாது

அடிப்படை வசதிகளில் குறைவு இருக்கக்கூடாது

கோவை: மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடக்கும் பணிகள் தொடர்பாக அமைச்சர் சம்பத்குமார், கமிஷனர் ரவி தேஜா பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம், ஜூன் 27 ல் நடந்தது. அப்போது 'குடிநீர், சாலை, சுகாதாரம், தெருவிளக்குகள் பிரச்னைகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்று அமைச்சர் அறிவுறுத்தினார். சீரநாயக்கன்பாளையம் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை ஆய்வு செய்த அவர், சரி செய்யுமாறு கூறினார். வீரகேரளத்தில் கிருஷ்ணாம்பதி குளத்திற்கு செல்லும் வாய்க்கால் பகுதியையும் அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை