உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாரிகளில் கனிமவளம் கொண்டு செல்லும்போது விதிமீறல் கூடாது

லாரிகளில் கனிமவளம் கொண்டு செல்லும்போது விதிமீறல் கூடாது

கோவை: கோவையிலிருந்து அன்றாடம், கேரளாவுக்கு கனிமவளங்கள் கட்டுமானப்பணிகளுக்காக அரசு அனுமதி பெற்று, அனுமதிச்சீட்டோடு கொண்டு செல்லப்படுகிறது. லாரிகளில் கொண்டு செல்லும் போது லாரிகளுக்கு நடைச்சீட்டு வழங்கப்படுகிறது.கனிமவளங்களை கொண்டுசெல்லும் போது, லாரியில் அனுமதிச்சீட்டு, நடைச்சீட்டு, கனிமவளத்தின் பெயர், எடை, அடர்த்தி, கன அளவு, ஜி.எஸ்.டி.,ரசீது, குவாரி ரசீது, எடைமேடை ரசீது ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.இதில் ஏதாவது ஒன்று இல்லை என்றாலும், பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை அவமதித்ததாகவும், டிரைவர் மீது கிரிமினல் வழக்கு தொடரலாம். 1988 மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்கலாம் என்று, தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.இது குறித்து, கோவை சரக போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் அழகரசு, அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், உத்தரவுகளுக்கும் புறம்பாக செயல்படும் பணியாளர்கள் மீது, துறைசார்ந்த, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !