மேலும் செய்திகள்
மணமான பெண் மாயம்
03-Oct-2025
கோவை:கற்பகம் நிகர்நிலைப்பல்கலையின் நிகழ்த்துக்கலைப்புலத்தின் இசைத்துறை சார்பில், ஐந்து நாள் மாநில அளவிலான தேவாரப் பாடல் பயிற்சிப் பயிலரங்கு,நிறைவு விழா நடந்தது. கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் வசந்தகுமார் விழாவுக்குத் தலைமை வகித்து, இசைத்துறைப் பேராசிரியர்கள் தொகுத்த தேவாரப் பதிகநுாலினை வெளியிட்டார். அவர் பேசுகையில், 'இன்றளவும்', 'வேயுறுதோளி பங்கன்' முதலான திருப்பதிகங்கள் அடியாரைப் பலவகைத் துன்பங்களிலிருந்தும் காக்கின்றன . வாழ்க்கை நெறிக்கருவூலமாகிய தேவாரப் பாடல்களை மனனம் செய்து நாளும் ஓதுகையில், எண்ணம் சிறக்கும், '' என்றார், பயிலரங்கில் பங்கேற்ற 750 மாணவர்கள், பெருங்குழுவினராகப் பாடிய தேவாரப் பண்ணிசை, விழாவுக்குச் சிறப்பு சேர்த்தது. முதன்மைச் செயல் அலுவலர் முருகையா, துணைவேந்தர் ரவி, பதிவாளர் பிரதீப், டீன் ஜனகமாயாதேவி மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
03-Oct-2025