உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வந்தார்கள்... சென்றார்கள்; கிராம சபையில் அவலம்

வந்தார்கள்... சென்றார்கள்; கிராம சபையில் அவலம்

தொழிலாளர் தினத்தையொட்டி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளில் நடந்த கிராம சபையில், 410 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆண்கள் 1565; பெண்கள் 2,534 பேர் பங்கேற்றனர்.* உடுமலை ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சியில், கிராம மக்கள் பங்களிப்பு இல்லாமல், வி.ஏ.ஓ., ரேஷன் கடை பணியாளர், துாய்மைப்பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் மட்டுமே கிராம சபையில் பங்கேற்றதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.எவ்வித விவாதமும் இல்லாமல், பெயரளவுக்கு வந்தார்கள், சென்றார்கள் என பள்ளபாளையம் ஊராட்சி கிராம சபையின் செயல்பாடுகளை சமூக ஆர்வலர்கள் வீடியோ பதிவு செய்து, அரசின் கவனத்துக்கு அனுப்பியுள்ளனர்.இதே போல் பெரும்பாலான ஊராட்சிகளில், பெயரளவுக்கே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.* பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட 1118 ஊராட்சிகளில், மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 26 ஊராட்சிகளில், ஆண்கள், 1,866, பெண்கள், 2,101, மற்றவர்கள், 1, என மொத்தம், 3,962 பேர் பங்கேற்றனர். மொத்தம், 452 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 39 ஊராட்சிகளில், ஆண்கள், 2,559, பெண்கள், 3,387 பேர் பங்றே்றனர். மொத்தம், 720 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.அனைத்து பகுதிகளிலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில், வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளிடம் கையெழுத்து பெற்று, கண்துடைப்புக்காக கிராம சபை கூட்டம் நடந்தது. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை