உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பூட்டை திறந்து திருடி விட்டு மீண்டும் பூட்டி சென்ற திருடன் கைது

 பூட்டை திறந்து திருடி விட்டு மீண்டும் பூட்டி சென்ற திருடன் கைது

காரமடை காரமடை கே.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் 31. தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிகிறார். இவரது மனைவி மேட்டுப்பாளையத்தில் தனியார் வங்கியில் வேலை செய்கிறார். இருவரும் வீட்டை பூட்டி விட்டு, சாவியை வீட்டின் வெளியே உள்ள மீட்டர் பாக்சில் வைத்துவிட்டு சென்றனர். இதை நோட்டமிட்ட யாரோ திருடன், பட்டப்பகலில் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று பீரோவை உடைத்து 4 பவுன் தங்க நகை திருடி, மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு, சாவியை அதே இடத்தில் வைத்து விட்டு சென்றான். வீடு திரும்பிய தினேஷ்குமார் திருட்டு நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். காரமடை ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, நேற்று மேட்டுப் பாளையம் கார்த்திகேயன் என்பவரை கைது செய்து நகைகளை மீட்டனர். கார்த்திகேயன் மீது திருப்பூர் மற்றும் கோவை மாநகர் ஸ்டேஷன்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை