உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் - பட்டம் வினாடி - வினா போட்டி ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்

தினமலர் - பட்டம் வினாடி - வினா போட்டி ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்

உடுமலை; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற மெகா வினாடி - வினா போட்டி, உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது.திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, பட்டம் இதழ் நாள்தோறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை மேம்படுத்தும் வகையில், கடந்த 2018 முதல் 'மெகா வினாடி-வினா' போட்டி நடத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ- ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி உள்ளது.நேற்று பள்ளியில் நடந்த இப்போட்டியில், முதல் சுற்றில், 150 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது.மூன்று கட்டங்களாக நடந்த போட்டியில், முதல் பரிசை 'ஈ' அணியை சேர்ந்த, பிளஸ் 2 மாணவர்கள் சிவதர்ஷன், கோகுல்நாத் ஆகியோர் வென்றனர்.போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை பள்ளி முதல்வர் மாலா, ஒருங்கிணைப்பாளர் சங்கீதா, பள்ளி அலுவலர்கள் விஜயகுமார், மனோரம்யா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர்.இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும்.

வாசிப்பு ஊக்குவிப்பு

பள்ளி முதல்வர் மாலா கூறியதாவது:மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பெரிய துாண்டுகோல் தான் பட்டம் மாணவர் இதழ். அறிவியல், வரலாறு புதிய கண்டுபிடிப்புகள் என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு அறிவுப்பெட்டகமாக திகழ்கிறது.முதல் பக்கத்தின் வடிவமைப்பே, அதிலுள்ள தகவல்களை அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தை துாண்டுகிறது. பள்ளியில் நடக்கும் வினாடி - வினா போட்டிகளுக்கும், மாணவர்கள் அவர்களை தயார்படுத்திக்கொள்வதற்கு இந்த இதழைத்தான் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு கூறினார்.

அறிய தகவல்கள்

மாணவர் சிவதர்ஷன்: பட்டம் இதழ் வாசிப்பதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. மேல்நிலை வகுப்புகள் மட்டுமில்லாமல் அனைத்து வகுப்பினரும் படிக்கும் வகையில்தான் தகவல்கள் அதில் வழங்கப்பட்டுள்ளன. பாடபுத்தகத்தில் இல்லாத பல அறிய தகவல்கள் இதில் இருப்பதால், ஒவ்வொரு முறையும் புதிதாக படிப்பதை போல் ஆர்வம் ஏற்படுகிறது.

திறன்களை அறியமுடிகிறது

மாணவர் கோகுல்நாத்: பட்டம் இதழ் படிப்பதால் அறிவு சார்ந்த மற்ற போட்டிகளில் பங்கேற்பதற்கும் பயனுள்ளதாக உள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் விரும்பி படிக்கின்றனர். இதில் நடத்தப்படும் வினாடி - வினா போட்டியால் எங்களின் திறன்களை அறிந்துகொள்ள முடிகிறது. போட்டியில் வெற்றி பெற்று பரிசையும் வெல்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை