மேலும் செய்திகள்
நகை திருட்டு; போலீசார் விசாரணை
12-Sep-2025
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ திருவிழா நடந்தது. நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே வரசித்தி விநாயகர் கோவில் மூன்றாம் ஆண்டு நிகழ்வையொட்டி திருவிளக்கு ஏற்றுதல், புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, மூன்றாம் ஆண்டு முதற்கால சிறப்பு வேள்வி வழிபாடு, பேரொளி வழிபாடு, சிவ வாத்தியம் இசைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. காமாட்சியம்மன் கோவிலில் இருந்து சிவ வாத்தியங்களுடன், 108 பால்குடங்கள் எடுத்து வருதல், மகா அபிஷேகம், திருக்குட நீர் அபிஷேகம், அலங்கார பூஜை, திருநீறு வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, அபிஷேக அலங்கார பூஜை, வெள்ளி கவச அலங்காரம், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் பஜனை குழுவினரின் பஜனை, அன்னதானம், வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம், திருவீதி உலா, வாணவேடிக்கை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி 'வாழ்க்கையிலும், சமூகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியது திரையிசை பாடல்களா, திரைப்பட வசனங்களா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
12-Sep-2025