மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட்: நல்லறம் அணியினர் அபாரம்
கோவை:கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. சேம் கிரிக்கெட் அகாடமி அணியினர் 27 ஓவரில் 101 ரன் எடுத்தனர். எதிரணியின் மது ஐந்து விக்கெட், கிஷான் மூன்று விக்கெட் வீழ்த்தினர். நல்லறம் அறக்கட்டளை அணியினர் 16.5 ஓவரில் 102 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். கோவை பிரிகேட்ஸ் அணியினர் 50 ஓவரில் 261 ரன் எடுத்தனர். எஸ்.ஆர்.ஐ.ஐ., கிரிக்கெட் கிளப் அணியினர் 36.5 ஓவரில் 119 ரன் எடுத்து தோல்வியை சந்தித்தனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.